உலகம் போற்றும் உத்தமரின் ஏழு ஆண்டு கால ஆட்சி

அரசியல் இந்தியா

பணக்கார வர்க்கத்தைச் சாராத, பரம்பரை அரசியல் குடும்பத்தைச் சாராத, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடியைச் சாராத, ஒரு ஏழைத்தாயின் பிள்ளையான ஒருவர் பாரத திருநாட்டின் பெருமைமிகு பிரதமராக 7 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றார். இந்த 7 ஆண்டுகளில் அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போய் ஓய்வு எடுத்ததில்லை. கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டதில்லை.

ஊழலில் சிக்காத பிரதமர்; தனது அமைச்சரவை சகாக்களையும் ஊழல் செய்யாதவர்களாகப் பார்த்துக்கொள்கிறார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலில் இது ஓரு மாபெரும் சாதனை. சர்வதேச உறவுகளைப் பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார். உலக நாடுகள் மத்தியில் நம் பாரத நாட்டின் புகழ் ஓங்கி உயர்ந்திருக்கிறது. சர்வதேச அமைப்புகள் இந்தியாவை வெகுவாகப் பாராட்டும்படி வைத்திருக்கிறார்.

இஸ்லாமிய தீவிரவாதம் பரவி இருக்கும் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுப்பதானாலும், சதிகார சீனாவை ராஜதந்திர வகையிலும் ராணுவ ரீதியிலும் சந்திப்பதானாலும், மிகவும் திறம்பட கையாண்டு வருகிறார். உள்நாட்டில் இயங்கி வந்த தீவிரவாத, பயங்கரவாத, நக்ஸலிஸ, பிரிவினைவாத, மதமாற்ற கும்பல்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருக்கிறார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள்.

கடந்த 7 ஆண்டுகளில் நம் பாரத மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் நம் பாரத பிரதமர் மோடி. விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறார். கழிவறை இல்லாத வீடுகளுக்குக் கழிவறை கட்டிக்கொள்ள 12,000 ரூபாய் கொடுக்கிறார். இதனால் கிராமங்கள் அனைத்தும் இன்று “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத” கிராமங்களாக மாறியுள்ளது.

கொள்ளை லாபம் பார்க்கும் பார்மசிக்கு மாற்றாக, மலிவுவிலை மக்கள் மருந்தகம் தொடங்கினார். இளைஞர்களுக்கு தொழில் தொடங்க எளிதில் வங்கிக்கடன், பெண்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் இலவச சமையல் எரிவாயு திட்டம், பெண் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஏழை எளியோருக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், கிட்டதட்ட 50 கோடி பேருக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு, அனைவருக்கும் இலவச வங்கிக் கணக்கு, மிகக் குறைந்த பிரிமியத்தில் காப்பீடு, என்று இவர் செய்த மக்கள் நல பணிகள் நீண்டு கொண்டே போகிறது.

புதிய மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டிக்கொள்ள மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கானக் கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். புதிய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறந்து படிப்பறிவு மேம்பட செய்துள்ளார். அரசாங்க பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நடைபெற்று வந்த ஊழலை ஒழிக்க நேர்முகத் தேர்வை ரத்து செய்தது முதலிய எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் மோடி ஜி.

70 ஆண்டுகளாக செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த 370 சட்டத்தை நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்துள்ளார். வரி சீர்திருத்தத்தின் பொருட்டு GST-ஐ கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு குடிமகனும் தான் எதற்கு எவ்வளவு வரியை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் செலுத்துகிறோம் என்பதை வெளிப்படையாக்கியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பின்படி மிகவும் அமைதியான முறையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வழிவகை செய்துள்ளார்.

சீன தேசத்தில் இருந்து பரப்பிய கொரோனா எனும் கொடிய நோய் நம்மை பீடித்திருக்கும் இந்த நேரம் சவால்கள் சூழ்ந்த நேரம். இந்தக் காலகட்டத்தில் மோடி மட்டும் பிரதமராக இருந்திருக்காவிட்டால் நம் தேசம் சின்னாபின்னமாகியிருக்கும். நம் தேசம் செய்த வரம் தான், நரேந்திர மோடி நமக்குப் பிரதமராக கிடைத்திருப்பது. PPE Kit பெருமளவில் தயாரிப்பது, முகக்கவசம் தயாரிப்பதை முடுக்கிவிட்டது, தடுப்பூசிகளைக் கோடிக்கணக்கில் தயாரிக்க வைத்தது, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தியது, கொரோனாவைக் குணப்படுத்த மருந்து தயாரிக்க DRDO-ஐ ஊக்கப்படுத்தியது, எல்லாவற்றுக்கும் மேலாக தனது மந்திரச் சொற்களால் நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களைக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டுக் கட்டுப்பாட்டோடு இருக்க வைத்தது – இப்படி பல அற்புதங்களைச் செய்து வருகிறார்.

உலகமே இந்த மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறது. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிப் போல, நரேந்திர மோடியின் ஆட்சி என்பது தேசிய ஒற்றுமை பேணும் ஆட்சி; நேர்மையான ஆட்சி; நாட்டைப் பாதுகாக்கும் ஆட்சி; நாட்டு மக்களை மேம்படுத்தும் ஆட்சி; தொலைநோக்குப் பார்வையோடு நடத்தப்படும் ஆட்சி. மோடி அவர்கள் நிச்சயம் வாராது வந்த மாமணி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *