80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் அந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவையாறு தேரடி வீதியில் பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது அதிமுக அரசு தான் என்று குறிப்பிட்டார். தண்ணீருக்கு கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று கூறினார்.
80ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக பேசிய முதலமைச்சர்,
மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஏரி, குளங்களில் தூர்வாரி குடிமராமத்து பணிகள் நடைபெற்றதன் காரணமாக கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்று முதலமைச்சர் கூறினார். தடுப்பு அணைகளை அதிகப்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தான் விவசாயி என்று கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.