அடம் பிடித்து 3வது முறையாக ஜோடி போடும் இளம் நடிகர்

சினிமா

நடித்தால் ரஷ்மிகா மந்தனா கூடதான் நடிப்பேன் என இளம் நடிகர் ஒருவர் அடம்பிடித்து மூன்றாவது முறையாக அவருடன் ஜோடி போட உள்ள செய்தி தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Rashmika Mandanna - Movies, Biography, News, Age & Photos | BookMyShow

கன்னட சினிமாவில் அறிமுகமான ரஷ்மிகா மந்தனாவை சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது தெலுங்கு சினிமா. தற்போது ரஷ்மிகா நடிக்காத படமே கிடையாது என்னும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

மகேஷ் பாபுவுடன் சரிலெரு நீகேவரு என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக ரஷ்மிகா ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் ரஷ்மிகாவின் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தெலுங்கு சினிமாவின் மற்ற நடிகைகளுக்கு பொறாமை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க ரஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படத்தில் ஜோடி போட்டு நடிக்கவுள்ளனர்.இதற்காக விஜய் தேவர்கொண்டா ரஷ்மிகா தான் வேண்டும் என அடம் பிடித்ததாக கூறுகின்றனர். ஏற்கனவே இருவருக்குள்ளும் காதல் இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்து நிலையில் விஜய் தேவர்கொண்டா இப்படி அடம்பிடிப்பதை உறுதி செய்துள்ளது என்கிறார்கள் அக்கட தேச சினிமா காரர்கள்.

Rashmika on Vijay Devarakonda: He isn't insecure person like Rakshit,  helped me get over from my break-up - IBTimes India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *