ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல்: மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

அரசியல் தமிழகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைக்கு ஒரே கட்டமாக, வரும் ஏபரல் 6ஆம் தேதி அன்று, வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

முன்னதாக, மார்ச் 12ம் ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் இறுதி நாள், மார்ச் 19 ஆம் தேதியாகும். வேட்பு மனு பரிசீலனை, மார்ச் 20ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத்தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம்; காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்; வாக்குச்சாவடிகளில் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால், தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழகத்தில் வேட்பாளர் ஒருவர் தொகுதி ஒன்றுக்கு ரூ.30.80 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *