தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அரசியல் தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரி ,கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் ஏப்ரல், மே மாதங்களில் நிறைவு பெறுகிறது. தமிழக அரசின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டதும், அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கடந்த 24 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் குறித்து சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

இச்சூழலில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *