2ம் நாளாக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

தமிழகம் நகரம்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம், 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (பிப்ரவரி 25) முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில், திமுக ஆதரவு தொழிற்சங்கமாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

முதல்நாளில் குறைந்த எண்ணிக்கையிலே பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகள் குறைவாக இருந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள். இச்சூழலில், அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம், 2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது. பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால், பல மாவட்டங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதனால், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களை பலரும் நம்ப வேண்டியுள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆட்டோக்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *