கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!

அரசியல் இந்தியா தமிழகம்

கோவையில் இன்று ஒரே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையத்திலும், காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *