திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ராஜினாமா… பாஜகவில் இணைய முடிவு ?

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏவான சுவேந்து அதிகாரி பா.ஜ.க.வில் இணைவது உறுதியாகி உள்ளது.

தாம் வகித்து வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை விட்டு ஏற்கனவே விலகிய நிலையில், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். வார இறுதியில் மேற்குவங்கத்துக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் செல்வாக்குள்ள நபர்கள் விலகுவது பின்னடைவை ஏற்படுத்தும் என  திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *