காதலன் ஏமாற்றிய சோகத்தில் த்ரிஷா…கரம் பிடிக்கும் சிம்பு.! கொரோனா உரடங்கில் வளர்ந்த காதல்.. விரைவில் டும்..டும்..டும்..!

நடிகர் சிம்பு நடித்த அலை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திரிஷா, 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்த போது சிம்பு-திரிஷா இருவருக்கு இடையே தொடங்கிய ஆழமான நட்பு இன்றுவரை தொடர்கிறது. பள்ளி பருவத்தில் இருந்தே ஒரு உச்ச நடிகரின் மகளை காதலித்து வந்த சிம்பு அலை படத்தில் இருந்து திரிஷாவுடன் ஏற்பட்ட நட்பு, அந்த உச்ச நச்சத்திர மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு பின் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் ஜோடி பிரிந்தது.

அதன் பின் நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து அவர் காதலித்த பெண்களும் சிம்பு மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர், மேலும் தனது நடிப்பு துறைக்கு நீண்ட இடைவேளை கொடுத்த நடிகர் சிம்பு மாநாடு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியிலே நின்றது, சிம்புவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,

இந்நிலையில் நடிகை திரிஷா நீண்ட காலமாக காதலித்து வந்த தெலுங்கு நடிகர் ராணா இவரை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது திரிஷாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளிப்படையாகவே திரிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சோகத்தில் இருக்கும் திரிஷாவுக்கு ஆதரவாக ஏற்கனவே மூன்று முறை காதல் தோல்வியை சந்தித்து மீண்டு வந்துள்ள அவரின் நீண்ட கால நன்பரான சிம்பு ஆறுதலாக பேசி வந்துள்ளனர்.

இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் பற்றி சில விஷயங்கள் கிசு கிசுக்க படுகிறது, அதில் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் சிம்பு – திரிஷா இருவருக்கும் இடையே இருந்து வந்த நட்பு காதலாக மாறியுள்ளதாகவும், விரைவில் இது குறித்து இருவரும் அறிவிப்பார்கள் என கிசு கிசுக்க படுகிறது, மேலும் இருவருக்கும் 37 வயதை கடக்கும் தருவாயில் இருப்பதால் இருவரின் வீட்டிலும் அவர்கள் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இருவரும் அவரவர் வீட்டின் சம்மதத்துடன் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடித்த பின் மணமேடையில் அமர்வார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் கூட சிம்பு – த்ரிஷா இருவரும் பலமுறை நேரில் சந்தித்து பேசிய தகவலும் நாள்தோறும் வெளியாகி வருவதால், இவர்களின் நட்பு காதலாக மலர்த்துள்ளதாகவும் அதை அவர்களே விரைவில் அறிவிப்பார்கள் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்க படுகிறது.

மைனர் பெண்ணை கடத்திய திமுக ஐடி பிரிவு நிர்வாகி போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைப்பு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *