அந்த விஷயத்தில் பெரியாரை பின்பற்றுகிறார் உதயநிதி.! வெளிப்படையாக தெரிவித்த நடிகை மீரா மிதுன்.!

நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றவர் மீரா மிதுன், தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகர் விஜய், மற்றும் சூர்யா ஆகியோரை எதிர்த்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா, என்ற சிறிதும் அச்சம் இல்லாமல் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜய் ஆகியோரை எதிர்த்து கருத்து தெரிவித்து, அவர்களின் ரசிகர்கள் எதிர்ப்பால் மேலும் பிரபலம் அடைந்தார் மீரா மிதுன்.

இந்நிலையில் தொடர்ந்து தனது டிவீட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார் மீரா மிதுன், தமிழக்தில் ஒரே தளபதி ஸ்டாலின் தான் என்றும் நடிகர் விஜயை தளபதியாக ஏற்று கொள்ள முடியாது என்று எதற்கு முன் தெரிவித்த மீரா மீது அவ்வப்போது உதயநிதியையும் பாராட்ட தயங்குவது கிடையாது, இதனால் மீரா மிதுன் திமுகவில் இணைய இருப்பதாக கூட செய்திகள் வெளியானது.

தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மீரா மிதுன் சிறிது நாட்கள் அவரை காணவில்லை, சிலர் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகின ஆனால் மீண்டும் தனது டிவீட்டர் பக்கத்தில் தோன்றி கருத்துக்களை தெரிவித்து வருகிறார், இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த தினம் திமுக சார்பில் அனுசரிக்கப்பட்ட நிலையில் தனது டிவீட்டர் பக்கத்தில் உதயநிதி உடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்ட மீரா மீதுன்.

பெரியார் மிக பெரிய புரட்சியாளர் என குறிப்பிட்டவர், தற்போது பெரியாரின் தத்துவத்தை பின் பற்ற கூடிய நபராக உதயநிதி செயல்படுவதை என்னால் பார்க்க முடிகிறது என உதயநிதிக்கு புகாரம் சூட்டி வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் மீராமீதுன், இதனை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மீரா மிதுன் கருத்தை ஆதரித்து ஏற்கனவே மூன்றாம் கலைஞர் உதயநிதி என போஸ்டர் அடித்தவர்கள், தற்போது வாழும் பெரியார் உதயநிதி என தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா, சத்யராஜ் அன்று கூனிக் குறுகி நின்று போது எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டது இனமானம்? தமிழருவி மணியன் கடும் தாக்கு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *