தமிழகத்தை சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி என்பவர் 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.அவரை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதை அறிவித்தது.தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் மக்களை அடையாளம் கண்டு மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி வருகிறது என்பது நிதர்சனமனா உண்மை.
தி.மு.க. தங்களுக்கு வேண்டிய பல துறைகளை முந்தைய காங்கிரஸ் அரசிடம் அழுது வாங்கியது.பாப்பம்மாள் போன்ற விவசாயி பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொடுத்ததில்லை.இந்நிலையில் பாப்பம்மாள் பாட்டியை கழக முன்னோடி என்று கூறி தி.மு.க. அரசியல் செய்தது.
இதை பார்த்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.”10 ஆண்டுகளாக நீங்கள் முந்தைய காங்கிரஸ் அரசை ஆதரித்தீர்கள். ஆனால் பாப்பம்மாள் பாட்டியை போன்றவர்களை அடையாளம் காண முடியவில்லை. பா.ஜ.க அரசு அவரின் சாதனையை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளது. ஆனால் வெட்கமின்றி அதனுடைய பலனை பெற விரும்புகிறீர்கள்.. இந்த விருதுக்கு முன்பு அவர் எங்கே இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.