கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டவரா உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினின் கட்டளைகளை திமுகவினர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது அவரது மகன் உதயநிதியும் அவரது பேச்சை கேட்பதில்லையாம். கட்சி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் திராவிட சித்தாந்தவாதியான ஈ வே ராமசாமி நாயக்கர், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினின் படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் 22 டிசம்பர் 2020 அறிக்கையை மதிக்காமல் தொடர்ந்து தனது படங்களை முன்னிலை படுத்தி வருகிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

கட்சியின் செய்தி ஊடகமான முரசொலி இந்த விதியைக் கடைப்பிடிக்கவில்லை என்று இரண்டாம் நிலை தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதயநிதி நிர்வாக இயக்குநராக இருக்கும் போது, தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், உடன்பிறப்புகள் தொடர்ந்து இவ்வாறு செய்திகள் வெளியிட்டுள்ளனர். உதயநிதியின் தாத்தா கருணாநிதியின் அறிவுறுத்தல்களை முரசொலி எப்போதும் பின்பற்றுவதாக பழைய கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கட்சி உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இது கட்சித் தலைவரின் மகனுக்கு வழங்கப்படும் தேவையற்ற முக்கியத்துவத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.

பிரச்சனை உதயநிதியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்ல. மாறாக அது உதயநிதியின் தேவையற்ற பதவி உயர்வு பற்றியது. உதாரணமாக, திமுகவுக்கு 10,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை கட்சிக்காக உழைத்து, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால் திமுகவின் சட்டப் பிரிவு மாநாட்டில் கட்சிக் கொடியை உதயநிதி ஏற்றினார், ஏனெனில் அவர் கட்சித் தலைவரின் மகன்.

கட்சியில் உதயநிதிக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கட்சி விளம்பரங்களில் மற்றவர்களின் படங்களை பயன்படுத்துவதற்கு எதிரான அறிவுறுத்தல் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நம்மில் பெரும்பாலோர் உணர்கிறோம், உதயநிதி அல்ல, என்று மூத்த திமுக நிர்வாகி நம்மிடம் புலம்பினார்.
உதயநிதிக்கு நெருக்கமானவர்களை நாம் தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இப்படியே தொடர்ந்தால் நாங்கள் வேறு கட்சிக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வாய்ப்புகளை இது வெகுவாக பாதிக்கும். என்று முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வளர்த்த கட்சியில், ஒரு குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது வேதனையான விஷயமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *