ஜனவரி 11 வரை 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்- தமிழக திரையரங்குகள்

ஜனவரி 11 வரை 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்- தமிழக திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மிழக திரையரங்குகள் ஜனவரி 11ஆம் தேதி வரை 50 விழுக்காடு இருக்கைகளோடு மட்டுமே இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

PVR to explore social distancing in its theatres after lockdown - The Hindu

திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 50 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்கினால், திரையிடுவது கடினம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனுதாரர், திரையரங்கு உரிமையாளர்கள், மத்திய அரசு வழக்கறிஞர் என முத்தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது என்று கூறினர்.

50 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்து தகவல் பெற்று ஜனவரி 11ல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடனேயே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *