சூரிக்கு தந்தை வேடத்தில் விஜய்சேதுபதி – விடுதலை

இந்தியா

அசுரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வெற்றிமாறன் அடுத்ததாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையிலிருந்து திரைக்கதையை உருவாக்கி விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார். மேலும் வெற்றிமாறன் படத்திற்கு முதன்முறையாக இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் ரசிகர்களை தூண்டும் விதமாக வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு தந்தை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது

New Movie Trailer: Aaranchu mittai Offical Trailer

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான பாரதிராஜா சுற்றுச்சூழலை காரணம் காட்டி விலகியதாகவும் அதன்பிறகு விஜய் சேதுபதி விருப்பப்பட்டு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான விடுதலை என்ற படத்தின் டைட்டிலை வைத்துள்ளார்களாம். விடுதலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்திருப்பார். சமீபகாலமாக ரஜினிகாந்தின் பழைய பட டைட்டில்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *