திமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை

அரசியல்

எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார். 

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசி பைபாஸ் சாலையில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே அந்த திட்டத்தை தொடங்கி வைப்பேன் எனவும் கூறினார். விவசாயிகளின் இன்னல்கள், துயரங்களை போக்கவே, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Image result for edapadi palanisamy

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, நீர்வளம் பெருக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். ஏழை தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இனிமேல் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

இலவச மின்சாரம் கோரி பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ஆட்சியில் இருந்த திமுக விவசாயிகளை சுட்டுக் கொன்றதாக குறிப்பிட்ட முதலமைச்சர், திமுகவை வாரிசு கட்சி, குடும்ப கட்சி என்று விமர்சித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *