மோடி அரசு என்ன செய்தது ? பாரத தேசத்திற்கு !..

அரசியல் இந்தியா உலகம் வர்த்தகம்

முதலில் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது மோடி அரசு.”மேக் இன் இந்தியா” எனும் திட்டம் அதில்தான் உருவானது, அதனால் என்ன பலன் என கேட்டால் சில உதாரணங்கள்,ஒரு நீர்மூழ்கி கப்பல் முன்பு வெளிநாட்டில் இருந்து வாங்குவோம் என வைத்து கொள்ளுங்கள், அதன் விலை 46 ஆயிரம் கோடி என இருக்கலாம்.இந்த 46 ஆயிரம் கோடியினை கண்ணை மூடிகொண்டு ஐரோப்பியநாடுகளிடம் கொடுப்போம் இந்த பணத்தில் அவர்கள் நாட்டில் வேலை நடக்கும், கிட்டதட்ட 10 ஆயிரம் தொழிலாளர் அனுதினமும் செய்யும் இந்த வேலையினை அவர்கள் நாட்டில் அவர்கள் குடிமக்கள் செய்வார்கள்.

இப்படி பெரும் கப்பல், விமானம், பிரமாண்ட சாதனங்கள், வானியல் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் என எல்லாமும் இப்படி அங்கேதான் செய்யபடும்.இதனால் இந்திய பணம் பல லட்சம் கோடி வெளியே செல்லும் வேலைவாய்ப்பு ஐரோப்பிய மக்களுக்குத்தான் உருவாகும்.

மோடி அரசு முதலில் “மேக் இன் இந்தியா” என சொல்லி வெளிநாட்டு நிறுவணங்கள் இங்கு வந்து பொருளை செய்ய சொன்னது. இந்திய அரசு சொல்வது என்ன தெரியுமா? “தொழில் நுட்பம் நீ கொண்டு வா, இங்கு வந்து உருவாக்கு. எங்கள் பட்டதாரிகள் தொழிலாளர் என எம்மக்களுக்கு வேலை கொடு, அந்த 10 ஆயிரம் பணியாளரும் இந்தியராக இருக்கட்டும்.இப்படி ஒரு கப்பலுக்கே 10 ஆயிரம் பேர் என்றால் , எல்லா துறையிலும் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.மிகபெரும் வேலைவாய்ப்பை கொடுக்கும் விண்வெளிதுறையில் தனியார் பங்கு என மோடி அழைப்பது இதனாலேதான், பல்லாயிரம் கோடிகளில் உருவாகும் அத்திட்டம் பெரும் வேலைவாய்ப்பினை கொடுக்கும்.

தகுதியும் திறமையும் இருக்கும் எல்லோரும் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கெடுக்கலாம்.திறமையை வளர்த்துக்கொள்வதற்கு என்று ” தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (National apprenticeship training scheme-NATS) ” உருவாக்கினார்.

படித்து முடித்த மாணவர்களுக்கு உபகாரசம்பளத்துடன் அரசு பல்வேறு தொழில் நிறுவணங்களுடன் இணைந்து வழங்கும் பயிற்சி இது. பொறியியல்,டிப்ளமோ,ஐ.டி.ஐ படித்த யாரும் விண்ணப்பிக்கலாம், இது படித்த உடன் மட்டும் அல்ல படித்து முடித்து பல வருடம் ஆனவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.அதில் ஓருவருடம் உங்களுக்கு உணவு, தங்க இடம், சம்பளத்துடன் கூடிய பயிற்சி கொடுப்பார்கள்.

இந்த பயிற்சி பெற நுழைவுதேர்வு, சிபாரிசு, உயர்மதிப்பெண் என எந்த சிக்கலும் இல்லை. பட்டம் இருந்தால் பயிற்சி பெறலாம். அங்கே வேலைவாய்ப்பும் கிடைக்கும் அது போக அரசுதுறை தனியார் துறை உள்ளிட்டவற்றின் வேலை வாய்ப்புகள் அங்கே சுட்டிகாட்டவும் படும்.

இதில் அரசு தன் விருப்பத்துக்கு பயிற்சி கொடுப்பதில்லை கம்பெனிகள் என்ன திறனை பணியாட்களிடம் எதிர்பார்க்கின்றது என கேட்டறிந்து அவர்களின் தேவைக்கு ஏற்ப திறன்களை வளர்க்கின்றது.இதனால் 1 வருட பயிற்சி முடிந்து பட்டதாரிகள் வெளிவரும் பொழுது கம்பெனிக்கும் பட்டதாரிக்குமான இடைவெளி இல்லை என்பதால் எளிதில் வேலை கிடைகின்றது.

அதை கடமையாக செய்கின்றது மத்திய அரசு, பயிற்சி நிலையங்கள் ஏகபட்டது உண்டு, அது பட்டதாரிகள் விரும்பும் இடத்தில் கிடைக்கின்றது.மோடி அரசின் ஆகசிறந்த வேலைவாய்ப்பு முயற்சி இது, தேசம் வலுவாக, இளைய சமுதாயம் வேலைகள் பெற எடுக்கபட்ட முயற்சி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *