ஒரே தேசம் ஒரே தேர்தல் அவசியம். ஏன்?

“பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘#ஒரேதேசம் #ஒரேதேர்தல்‘ திட்டம் மூலம் தேர்தல் செலவுகள் பல கோடிகள் குறையும்; அதற்கான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம்” என அரசியல் விமர்சகர் #ஸ்ரீராம்_சேஷாத்ரி வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பின் 1951 முதல் தேர்தல்கள் நடக்கின்றன. 1951, 1957, 1962 மற்றும் 1967 என நான்கு முறை லோக்சபாவிற்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் நடந்தன. இதன் மூலம் தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் செய்யும் செலவினங்கள் வெகுவாக குறையும். ஒவ்வாரு ஐந்தாண்டிற்கும் ரூ.10 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகிறது. இதுதவிர ரூ.30 முதல் 35 ஆயிரம் கோடியை கட்சியினர் செலவிடுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரிக்கின்றன. கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் ஆண்டிற்கு நான்குமுறை ‘எலக்ட்ரோல் பான்ட்’ மூலம் நிதி அளிக்க முடியும்.

1996 முதல் 1999க்குள் நான்கு லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. இதற்காக தான் 1999ல் #ஜீவன்ரெட்டி என்பவர் சட்ட கமிஷன் அமைத்து ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதை பரிசீலிக்கலாம் என வலியுறுத்தினார். அதன் பின் #அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் தற்போது #பிரதமர்மோடியும் வலியுறுத்தி வருகின்றனர்.

1967 வரை ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. #எமர்ஜென்சி நேரத்தில் பல மாநில ஆட்சிகளை அப்போதைய பிரதமர் #இந்திரா கலைத்தார். அதன் பின் மாநிலங்களில் நடக்கும் தேர்தல் முறை மாறின. இதை ஒழுங்குபடுத்த #ஒரேதேசம் #ஒரேதேர்தல் முறை சரியான தீர்வாக இருக்கும்.

ஆனால் அதில் உள்ள சிக்கல்களை களைய அரசியல் அமைப்பு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அடுத்த நுாறு ஆண்டுகளுக்கு தேவையான சீர்திருத்தங்கள் தேர்தலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் தேசிய சிந்தனை வளரும் என்றாலும் சுய லாபத்திற்காக மாநில கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கும்.
ஏனென்றால் 2014 வரை 30 ஆண்டுகள் மாநில கட்சிகள் மூலம் தான் மத்தியில் ஆட்சி அமைந்தன. சட்டசபை தேர்தல்களிலும் தேசிய சிந்தனையுடன் ஓட்டு போடத் துவங்கினால் மாநில கட்சிகள் காணாமல் போய் விடும். ஆனாலும் ஆக்கப்பூர்வமான இந்த மாற்றத்தை வரவேற்பது கட்டாயம், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *