கம்யூனிச நாடான சீனா, உலகில் உள்ள தன் எதிரிகளை அழிப்பதற்காக கொரோனா போன்ற நோய் கிருமிகளை பரப்பி வருகிறது. ஆனால் அதை விட கொடிய நோய் கிருமிகளை மேற்கத்திய நாடுகள் பாரத தேசத்தில் பரப்பி வருகின்றன. கொரானாவை எப்படி விழிப்புணர்வோடு இருந்து வெற்றி கொண்டோமோ, அது போன்று இந்து மத எதிரிகளிடமிருந்தும் விழிப்புணர்வோடு இருந்து மதத்தை காத்திடல் வேண்டும்; ஏனெனில் கொரானாவை விட கொடுமையானது மத துரோகம்.

நம் மதம் மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உணர்ந்த அன்னிய தேச சக்திகள், நமது கலாச்சாரத்தையும், கலாச்சாரத்தின் ஆதாரமாக இருக்கும் மதத்தையும் அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து நம் மதத்தை காக்க வேண்டும்.
நாம் வாழ்ந்து வரும் தெருவில், வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் ஆன்மீக சொற்பொழிவு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் நமது தெருவில் வாழ்ந்து வரும் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இன்று முதல் கண்டிப்பாக இதை ஏற்பாடு செய்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
வாரம் ஒருநாள், ஒரு மணிநேரம் வீதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை போதிக்கும் ஆன்மிக சொற்பொழிவு நடத்த வேண்டும். கடந்த 100 ஆண்டுகளாக நம்முடைய தமிழ் பண்பாடு எந்த அளவுக்கு விஞ்ஞான பூர்வமானது என்பதை மேல் நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.
அதனால் தான் நம்முடைய திருவிழாக்கள், சம்பிரதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள் போன்றவைகளை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் அவர்களுடைய திருவிழாவாக மாற்ற துவங்கி உள்ளார்கள். இதை தடுப்பதற்கும் தட்டிக் கேட்பதற்கும் நம்மில் யாருக்கும் நேரமில்லை.
காரணம் நம்முடைய நாட்டின் பணமதிப்பு, மேற்கு நாடுகளின் பண மதிப்பை விட மிகவும் குறைவாக இருப்பதும், இங்கே தனி நபர் வருமானம் போதுமான அளவு உயராமல் இருப்பதும் தான் முதல் முக்கிய காரணம் ஆகும்.
இது மட்டுமே நம்முடைய பண்பாட்டை பாதுகாப்பதற்கும், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நம்முடைய வாரிசுகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரே வழி.