என்னாது, ரம்யா பாண்டியன சூர்யா பாத்துடாரா ?…

சினிமா

தமிழ்நாட்டுல நடிகை ரம்யா பாண்டியன தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க .ரசிகர்கள் மனசுல வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன்.ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இதை பார்த்த நடிகர் சூர்யா அவரது தயாரிப்பில்,கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *