எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியது யார்?

இந்தியா

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS) – பாரத தேசத்தின் முதன்மையான உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம். சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான எய்ம்ஸ், சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது: ஆசியாவில் டாக்டர்களை எந்தவொரு தனியார் பயிற்சியிலும் தடைசெய்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கற்பிப்பதற்கும் மட்டுமல்லாமல், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் தங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமான தொடர்பில் இருக்க, இந்த நிறுவனத்தின் வளாகத்தில் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும், என கொள்கைகளை கொண்டுள்ளது.

முதல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆலோசனை அன்றைய பிரதமர் நேரு தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போதைய அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தினால் இத் திட்டம் தடைப்பட்டு கொண்டு வந்தது. ஜவகர்லால் நேருவின் முதல் அமைச்சரவையின் இருந்த முதல் பெண் அமைச்சர், கபுர்தலா இளவரசி “ராஜகுமாரி பிபிஜி அம்ரித் கவுர்”. இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர், உலக சுகாதார சபையின் முதல் பெண் தலைவர் மற்றும் முதல் ஆசியர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர்… என பல பதவிகளை வகித்தவர்.

தேசத்தின் நிதி பற்றாக்குறையை கவனித்த அன்னை அம்ரித் கவுர், நியூசிலாந்து அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரிய தொகையை வாங்கி, ராக்ஃபெல்லர் அறக்கட்டளை (Rockefeller foundation), மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை (Ford foundation) போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்தும், ஆஸ்திரேலியா, மேற்கு ஜெர்மனி, சுவீடன், டச்சு மற்றும் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும் நன்கொடைகளைப் பெற்று 1956 ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவினார். 1961 ல், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவிலிருந்து சிறந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டதால் உலகளாவிய புகழ் பெற்றது எய்ம்ஸ். 14, ஆகஸ்ட் 1963 அன்று அன்னை அம்ரித் கவுர் தனது எய்ம்ஸின் கடைசி நிர்வாகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், அதில் அவர் சிம்லாவில் உள்ள மனோர்வில்லா எனும் தனது இல்லத்தை எய்ம்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

கடந்த சில மாதங்களில், இந்தியா உலகளாவிய சீன வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருவதால், நாட்டின் உச்ச மருத்துவ அமைப்பின் பங்கு பல சந்தர்ப்பங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு, எய்ம்ஸ் அடைந்த உயரங்களுக்கு பெருமை சேர்த்தவர். எய்ம்ஸ் நேரு அரசாங்கத்தின் கீழ் வந்தது என்பது உண்மைதான். இருப்பினும், அதன் பின்னால் உண்மையான உந்துசக்தி அம்ரித் கவுர். அவரது நினைவாக இங்குள்ள ஒரு கட்டிடத்துக்கு “அம்ரித் கவுர் நினைவு கட்டிடம்” என பெயர் சூட்டினார் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள்.

2003 வரை நாட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது. வாஜ்பாய் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திருமதி சுஷ்மா சுவராஜ் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், ராய்ப்பூர் பாட்னா, ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவினார். இவை அனைத்தும் 2012 முதல் இயங்கி வருகின்றன. 2013ல் சோனியாகாந்தியின் சொந்தத் தொகுதியான ரேபரேலியில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டினார் காங்கிரஸ் அரசின் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

2014 முதல் 2019 வரை பல்வேறு காலகட்டங்களில் நாடு முழுவதும் மங்களகிரி, நாக்பூர், கோரக்பூர், கல்யாணி, பதிந்தா, கவுஹாத்தி, விஜய்பூர், பிலாஸ்பூர், மதுரை, தர்பஙகா, தியோகர், ராஜ்கோட், பீபிநகர், மனேதி ஆகிய 14 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்ட உத்தரவிட்டார் பாரத பிரதமர் மோடி. இதில் 8 மருத்துவமனைகள் தற்போது மக்களுக்கான மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றன. மீதமுள்ள 6 மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *