யார் இந்த ஓவைஸி? ஏன் இந்த மாற்றம்?

நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதாக இருந்தால் என்றோ சென்றிருப்போம். ஆனால் எங்கள் தாய்நாடு இந்தியா; மதத்தால் தேசம் பிளவு பட்ட போதும், நாங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம், இதை விட்டு நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம், என சமீபத்தில் ஓவைசி பேசியிருக்கிறார், இப்படி நம்முள் ஒருவராய் இருக்கும் ஒரு இஸ்லாமியர் சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பியிருக்கலாம். ஆனால் சொன்னவர், உலகின் சக்தி வாய்ந்த 500 இஸ்லாமியர்களில் ஒருவரான, AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி. “ஏன்ப்பா அவர் சொன்னா நம்ப மாட்டியா?” எனக் கேட்கலாம். அதற்கு முன் முதலில் ஓவைஸி வரலாற்றைத் தெரிந்து கொண்டு விட்டு, பிறகு அந்தக் கேள்வியை அணுகுவோம்.

The BJP does not want Owaisi, the BJP does not need Owaisi

1920களின் இறுதியில், ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின் அறிவுரைப்படி MIM என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கையே, முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஒரு தன்னாட்சிப் பிரதேசத்தை உருவாக்குவது தான்.  இந்தியாவுடன் இணையும் எண்ணமே கிடையாது., 1944ல் காஸிம் ரஜ்வி (Qasim Razvi) என்பவர் இந்த அமைப்பிற்குத் தலைமை ஏற்கிறார். காஸிம் ரஜ்வி என்ற அந்தத் தீவிர இந்திய எதிர்ப்பாளர், சாதாரண அமைப்பாக இருந்த MIM க்குள், ‘ரஜாக்கர்’ என்கிற தீவிரவாதப் பிரிவை உருவாக்கினார். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கொண்ட பிரிவு அது. அவர்களின் ஒரே முழு முதல் வேலையே, ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதை எதிர்ப்பதாகும். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு “தெற்கு பாகிஸ்தான்” உருவாக வேண்டும் எனப் போராடினார்கள்.

 

1947 இல்  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. நம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் களமிறங்குகிறார். நேரு, காந்தி இருவரின் கடுமையான எதிர்ப்பிற்கிடையே ‘ஆபரேஷன் போலோ’ ஆரம்பிக்கிறார். வெறும் 35,000 இந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு, தனது அரசியல் சாதுர்யத்தால் நேரு காந்தி  கண்களைக் கட்டி, நிஜாமின் 22,000 ராணுவ வீரர்கள் & 2,00,000 ரஜாக்கர்கள் என அனைவரையும்  தெறித்து ஓட வைத்து, ஹைதராபாத்தை இந்தியாவின் அசைக்க முடியாத அங்கமாக நிலை நாட்டினார் படேல்.

ரஜாக்கர் என்கிற ரவுடி அமைப்பை வைத்து இந்திய ராணுவத்தை எதிர்த்த குற்றத்திற்காக காஸிம் ரஜ்வி 1957 வரை சிறையில் இருந்தார்.. பின் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆனதும் அவர் செய்த முதல் வேலை, பாகிஸ்தானுக்கு ஓடிப் போய் குடியேறியது. இன்று வரை அன்னாரின் வாரிசுகள் இருப்பது  பாகிஸ்தானில் தான்.

தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதாலும், மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்தியதாலும் MIM அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது, பாகிஸ்தானுக்கு ஓடிப் போகுமுன், நம்ம ரிஜ்வி MIM கட்சியை அப்படியே அப்துல் வஹீத் ஓவைஸி என்கிற இஸ்லாமிய வக்கீலிடம் ஒப்படைக்கிறார். வக்கீல் அல்லவா? பிரிவினை வாதம் பேசியதால் தடை செய்யப்பட்ட அமைப்பை அப்படியே தொடர முடியாது எனப் புரிந்து கொண்டார். எனவே MIM என்பதை AIMIM எனப் பெயர் மாற்றம் செய்கிறார். (இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? கழிப்பிடத்திற்கும் நவீன கழிப்பிடத்திற்கும் இருக்கும் வித்தியாசம் தான்.) அந்த அப்துல் வஹீத் ஓவைஸியின் பேரன் தான் நம்ம அசாதுதீன் ஓவைஸி.

 

இந்தியா என்கிற தேசமே பிடிக்காமல், இந்தியாவோடு இணையும் சிந்தனையே இல்லாமல், மத ரீதியாக தனி நாடு கேட்டுப் போராடிய, தீவிரவாதம் செய்து பாகிஸ்தானுக்கு ஓடிப்போன தலைவனைக் கொண்ட கட்சியின் இன்றைய தலைவர் இன்றுதான் சொல்கிறார், “நாங்கள் இந்தியர்கள்” என!  அதுவும் கட்சி ஆரம்பித்து 93 ஆண்டுகளுக்குப் பின். சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தான் அவர்களுக்குத் தாங்கள் இந்தியர்கள் என்கிற சுரணையே வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பத்தாததற்கு, ‘நாங்கள் கோவில் கட்ட 10 கோடி பணம் திரட்டினோம்’ என்கிறார் – இந்துக்களை தாஜா செய்ய.. எந்தக் கோவில் என எவனும் கேட்க மாட்டானே! அந்த தைரியத்தில் சும்மா அடித்து விடுவது தான்..

சரி ஓவைஸியிடம் ஏன் இந்தத் திடீர் மாற்றம்???

இத்தனை நாள் பிரிவினைவாதமும் இந்து மத எதிர்ப்பும் பேசிக்கிட்டு இருந்தவனை எல்லாம், ‘நானும் இந்தியன்’, ‘நானும் இந்து’, ‘இந்து எங்கள் சகோதரன்” எனப் பதறிக் கதற வைத்திருப்பது தான் பாஜகவின் ஆகப்பெரிய வெற்றி. காங்கிரஸ், திமுகவில் ஆரம்பித்து இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் தான் இந்த அசாதுதீன் ஒவைஸி.

93 வருடம் பிரிவினைவாதம் பேசியவரின் திடீர் இந்தியப் பாசம் எப்படி இருக்கும் என்பதை நடுநிலைகள் மற்றும் உண்மையான இந்திய முஸ்லிம்களின் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *