குரு தேஜ் பகதூருக்கு கடந்த சனிக்கிழமை அன்று நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குருத்வாரா சென்ற பிரதமர் மோடி, அங்கு குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்,குருதேஜ்பகதூர்( 1 ஏப்ரல் 1621 – 19 டிசம்பர் 1675) சீக்கிய மதத்தின் 9 வது குருவாவார். குருகோவிந்த் சிங்கின் தந்தை ஒப்பற்ற தவவலிமையுடைய நன்மகனாவார். ஔரங்கசீப் என்னும் மதவெறியன் காஷ்மீர் பண்டிட்டுகளை ஒடுக்கி மதம் மாற்றும் போது அவர்கள் நேராக குருதேஜ்பகதூரை அணுகி வழி கேட்டார்கள். தன் பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு வந்த நெருக்கடியை தாங்காமல் வலிமையுடன் ஔரங்கசீப்பை எதிர்த்தார் குரு.
சமாதானம் பேசலாம் என டெல்லிக்கு அழைக்கப்பட்டு இன்றைய சாந்தினி சவுக்கில் சீடர்களுடன் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் குருதேஜ்பகதூர். பாய் மதி தாஸ், பாய் சதி தாஸ் மற்றும் பாய் தயாலா ஆகிய மூன்று தோழர்களும் குருவின் முன்னிலையிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர்,பாய் மதி தாஸ் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரச்சட்டகத்துக்குள் வைத்து தலையில் இருந்து உடல் வழியாக முழு கூறாக அறுக்கப்பட்டார். இந்த கொடூரத்தை நிகழ்த்தும் முன்னர் அவருக்கு முஸ்லீம் மதத்துக்கு மாற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது; ஆனால் அவர் முஸ்லீம் மதத்துக்கு மாற மறுத்து மரணத்தை தழுவினார்.
அடுத்து பாய் சதிதாஸின் முறை வந்தது, அவரும் உறுதியாக எப்பேற்பட்ட மரணம் வந்தாலும் தனது தர்மத்தை விட்டு பிறழமாட்டேன்; என நின்றார். இதனால் ஆத்திரமடைந்த மதவெறி பாவிகள், பாய் சதிதாஸை எண்ணெயில் நனைத்த பருத்தி கம்பளியில் போர்த்தி தீவைத்தனர். அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.அடுத்தது, பாய் தயாளா ஒரு பெரிய பாத்திரத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார், பின்னர் அது தண்ணீரால் நிரப்பப்பட்டது. அந்த பாத்திரத்துக்கு கீழே வைக்கப்பட்ட அடுப்பில் உள்ள விறகில் தீ மூட்டினர். மதம் மாற மறுத்து கொதிக்கும் நீரில் வெந்து தன் உயிரை விட்டார் தர்மத்தை காக்க.
இது அத்தனையும் கூண்டில் அடைக்கப்பட்ட குருதேஜ் பகதூரின் கண்முன்னே நடக்கிறது. அதில் இறந்த தோழர்கள் மூவரும் தன் இறுதி மூச்சு வரை குருநானக்கின் ‘ஜபுஜி’ என்ற தெய்வீக மந்திரத்தை முழங்கியபடியே இறைவனடி சேர்ந்தனர்.
இறுதியாக இந்த மரணத்தை கண்டு நடுங்காமல் இருந்த குருதேஜ்பகதூரிடம் வந்தார்கள். முஸ்லீம் மதத்துக்கு மாறுவதை எள் முனையளவும் ஏற்காத குருவின் உடல் துண்டு துண்டாக அறுத்து எறியப்பட்டது. அதை எடுத்துச் செல்லக்கூட அனுமதி யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் குருஜியின் பக்தர்களான இரு விவசாயிகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மோதல் நடத்தி அவருடைய தலையை அனந்தபூர் சாஹிப்பிற்கு எடுத்துச் சென்று, அவர் மகன் குருகோவிந்த்சிங்கிடம் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் பெயர்தான் பாய் ஜயிதா.
குருவின் உடலை பாய் லக்கிஷா வஞ்சாரா என்ற வேளாண் வணிகர் எடுத்துக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து அந்த வீட்டையே தகனம் செய்தார். 1675-ல் குருவின் தலை துண்டிக்கப்பட்டு இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப். இந்த ராகெப் கஞ்ச் சாஹிப் தான் உத்தமசீடர் வஞ்சாராவின் கொளுத்தப்பட்ட வீடாகும்.
ஔரங்கசீப் போன்ற எண்ணற்ற மதவெறியர்களிடம் இருந்து ஹிந்துக்களின், பாரதியர்களின் தன்மானம் காக்க குருதிக் கொடை கொடுத்த சீக்கியர்களின் பாதத்தை தலையில் வைத்து சுமக்க காத்திருக்கிறோம் என்பதை அங்கே சென்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக உணர்த்திவிட்டார்.