கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறும் மகளிர் குழுக்கள்

தமிழகம்

முன்பெல்லாம் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி பல தொழிலதிபர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்தனர், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பாரத பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு திட்டமான “முத்ரா கடன்” திட்டத்தின் மூலம் தற்போது இது தடுக்கப்பட்டு வருகிறது.

செய்வதறியாது இருந்த இந்த கந்து வட்டி கும்பல், தற்போது மகளிர் சுய உதவி குழுக்களை வலைத்துள்ளது. தனியார் நிதி நிறுவனம் என்னும் கந்து வட்டி கும்பல்கள், மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்குகிறது. வாரம் 625 ரூபாய் என 52 வாரத்திற்க்கு அசலும் வட்டியுமாக 32,500 ரூபாய் வசூல் செய்கிறது.

20,000 ரூபாய் கட்டி முடித்த உடன் 40,000 ரூபாய் என கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது. 40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு வாரம் 600 ரூபாய் வரை கட்ட வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு செல்லும் போது இது பெரிய பாரம் இல்லை, ஆனால் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் குடும்பத்தில் வாரம் 600 ரூபாய் எப்படி கட்ட முடியும்?

வேலை இல்லாத வாரங்களிலும், பண்டிகை, விடுமுறை வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும். இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும், என்று அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்குகிறார்கள். ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், வேறு 10 பெண்களுடன் சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார். இப்படியே இது ஒரு தொடர்கதை ஆகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட நிதி நிறுவனங்களில் 20000, 40,000 என 1 லட்சம் வரை ஒரு பெண் கடன் வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு 1வாரத்திற்க்கு, 1 குழுவிற்க்கு ரூ 600 வீதம், 3 குழுவிற்க்கு 1,800 முதல் 2,000 ரூபாய் வரை ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000 எப்படி கட்ட முடியும்? குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தும் பணம் கட்டுகிறார்கள். பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று கண்டபடி திட்டுகிறார்கள்.

இவை அனைத்துமே நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களே. எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது, திட்டுவாங்குவது என நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள், எடுக்கும் முடிவு விபரீதமாக மாறுகிறது. ஒன்று அவர் தடம் மாறுகிறார், அல்லது மதம் மாறுகிறார். இது எதுவுமே முடியாதவர்கள், சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள். நம் ஊரில், நம் கண்முன்னேலேயே பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *