ரஜினி உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு உள்ளதா ..?

சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை  அச்சப்படும் அளவிற்கு இல்லாமல் முன்னேற்றம் அடைந்து வருவதாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினியின் ரத்தம் அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இருப்பினும் நேற்றைய நிலையுடன் ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Rajini stirs a storm with Periyar remark | India News - Times of India

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், ரஜினியின் உடல்நிலையில் எச்சரிக்கத்தக்க வகையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இன்று மேலும் சில பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு மாலை முடிவுகள் தெரியவரும் என அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ரஜினிக்கு கவனமாக மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால், முழுஓய்வில் இருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அப்போலோ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பரிசோதனை முடிவுகள் மற்றும் ரத்தம் அழுத்தம் கட்டுக்குள் வருவதன் அடிப்படையில், ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *