உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரின் பாராட்டை பெற்ற இந்தியவீரர் யார் தெரியுமா..?

இந்தியா விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நேற்று சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட் அவர்களை பலரும் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சற்றே தடுமாறியது எனினும் ரோஹித் சர்மா, பண்ட், சுந்தர் பேட்டிங்கில் அசத்தினர்.

India vs England 4th Test: Rishabh Pant – A hundred… and much more | Sports  News,The Indian Express

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்க்ரிஸ்ட் பண்ட் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து வைரலாகி வருகின்றது.

“நீங்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் ரன் குவிக்கிறீர்கள் என்பதும் முக்கியம் தான். டீமிற்கு நெருக்கடி மற்றும் தேவை இருக்கும் சமயத்தில் இந்த இரண்டையும் ஒரு சேர செய்தால் அவரே சிறந்த வெற்றியாளர். அப்படிப்பட்டவர் தான் பண்ட்.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *