WORST Bengal

இந்தியா

முன் ஒரு காலத்தில் கொல்கத்தா ரசகுல்லாவிற்கு பிரசித்தமானது. இன்று அது ட்ராகுலாவுக்கும். என்ன தான் நடக்கிறது அங்கு. சந்தேகமேயில்லாமல் “நவீன நவகாளி” போன்ற ஒன்றை சந்திக்கிறது. ஜனநாயகத்தினை காப்பாற்றுவதாக நினைத்து கொண்டு ஜனங்களை கொத்து கொத்தாக கொத்தி தின்றுக்கொண்டு இருக்கிறது அரசாங்கம். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ என்று மத்திய அரசை குறை சொல்வதை விடுத்து அங்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்திய ராணுவத்தினர் அங்கு களம் இறங்க முடியாது. அதே போலவே துணை ராணுவ படையினரையும் தான். இதனை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கின்றது என்ற போதிலும், அது மாநிலத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஏதேர்ச்சதிகாரமாகவே பார்க்கப்படும். அதன் பொருட்டே நேற்றைய தினம் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற சமயத்தில் மத்திய அரசு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. அதாவது ஆகச் சிறந்த பகடி இது.

இனி அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி. இனி அங்கு நடக்கும் அசம்பாவிதற்கு அவர் தான் பொறுப்பு. அங்கு நடக்கும் கலவரங்களை திட்டமிட்டு செய்வது யார் என்பது வரை அவருக்கு நன்றாகவே தெரியும். அதனை சரி செய்ய வேண்டும், கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீதான நடவடிக்கை பாயும். எந்த மாதிரியான நடவடிக்கை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ய முடியும். அதாவது தற்போதைய தேர்தல் வெற்றி வெறும் கானல் நீராகும்.

ஒரு வேளை இன்றைய பொழுதிற்குள்ளாக ஒடுக்கப்பட்டால் அது வெறும் நாடகம் தான் என்பதை அங்கு உள்ள மக்களே நன்றாக உணர்ந்து கொண்டு விடுவார்கள். இது மம்தாவுக்கு மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கும். அதற்கு தான் வாழ்த்து தெரிவித்துள்ளனர் மத்திய அரசு நிர்வாகம். மிகக்கடுமையான சூழலில் மம்தா பானர்ஜி உள்ளார். இது அவர் விரித்த வலையில் அவரே விழுந்து இருக்கிறார். பொய்யை மட்டுமே பேசிய பெண்மணியின் அசிங்கமான அரசியல் வெளிச்சத்திற்கு வர காத்துக் கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *