அரசு வங்கிகளுக்கு இணையாக, தனியார் வங்கிகள் தாராளமயம். காரணம் என்ன?

ஒரு தனியார் வங்கி குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைவதும், அதன் பின்னர் மிக அதிக வாராக்கடனால் திவாலாகுவதும், இதற்குப் பின்னால் இருக்கும் பண முதலைகள், அவர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் தொழில், போலி நிறுவனங்கள், மற்றும் அதைச் சார்ந்துள்ள அரசியல்வாதிகள் என, நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் தொடர்புகள் இருக்கும். இதனை விரிவாக தெரிந்து கொள்வதற்கு, சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள Yes Bank விவகாரம் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மிக அதிக வாராக்கடன், அதனால் ஏற்பட போகும் திவால் நிலை, இவையெல்லாம் 2017 ஆம் ஆண்டிலேயே Yes Bankன் விவகாரங்களில் தெளிவாக தெரிந்துவிட்டது. இந்த நிலையிலும் தெளிந்து கொள்ளாத அந்த வங்கி, இவற்றுக்கு பின்னரும் அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் வங்கி கடன் தொகை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக காட்டப்படும் போலி கணக்கை அடுத்து, Yes Bank-ன் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

போலி நிறுவனங்களை பயன்படுத்தி கடன் கொடுத்திருப்பதாக கணக்கு காட்டி, வெளிநாடுகளுக்கு பணத்தை கடத்தி இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் மற்றொரு பக்கம் இந்தியாவை பிடித்திருக்கும் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை என்றாலே நினைவுக்கு வருவது Yes Bank நிறுவனர் ராணா கபூர் குடும்ப விழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், நிதி அமைச்சராக பதவி வகித்த காலகட்டம் தான்.

இது போல், பல கோடி ஊழல் செய்ததில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு திகார் சிறை சென்று, ஜாமினில் வெளிவந்திருக்கும் ப.சிதம்பரம், தற்போது உள்ள பொருளாதாரம் குறித்து அறிவுரைகளை வழங்கி கொண்டு, அரசியல் செய்வது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். Yes bank கதையை விரிவாக, உள்ளது உள்ளபடி அரசியல் தலையீடு இல்லாமல் உண்மை நிலவரம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவர்களா? அப்படி உண்மை வெளிவரும் பட்சத்தில் காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் தப்பிக்க வழியில்லாமல் மாட்டி கொள்வார்கள் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, 2014 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் கடன்களை வாரி வழங்கியது. பணம் திரும்பி வராத இடங்கள் என தெரிந்தும், ஆட்சியில் இருந்த அந்த ஒரு முக்கியஸ்தரின் தலையீடு காரணமாக கோடி கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்தது. 2014ல் ஆட்சியை பிடித்த பாஜக, மொத்த கடன் கொடுப்பதற்கு பல கிடுக்கிப்பிடி ஆணைகளை தொடர, Yes Bank ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டது.

2017 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது தீவிர கண்காணிப்பில் இந்த வங்கியை கொண்டு வந்துள்ளது. இப்போதும் இந்த வங்கியில் வைப்பு நிதி / வங்கிக் கணக்கு
வைத்திருப்பவர்களின் நலனுக்காக, இந்த வங்கியை அழிவுப் பாதையில் இருந்து மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

பக்தர்கள் நன்மையே முக்கியம்! வடபழனி கோவிலை காக்க அதிகாரியை மாற்றுங்கள்!எம்எல்ஏ சத்யா அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *