நாடகக் காதல் படுகொலைகள் – ஓய்வில் இருக்கும் ஸ்டாலின்

அரசியல் தமிழகம்

உளுந்தூர்பேட்டையில், திருமணம் செய்ய மறுத்ததால், நாடகக் காதல் கும்பலால் திமுக கட்சி தொண்டர் வீரமணியின் 18 வயது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கலோ கண்டனமோ தெரிவிக்கவில்லை. காரணம் கேட்டால் அவர் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து வருவதாகவும், தற்போது அவர் அரசியல் கருத்துக்களை கூற மாட்டார் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதே போன்று அரக்கோணத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள், அவர்களுக்குள்ளான சண்டையில் கொலை செய்யப்பட்டதற்காக, அது சாதீய கொலை, அரசியல் கொலை என்றெல்லாம் இட்டுக்கட்டி, கொந்தளித்து, உடனடியாக அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின்.

இப்போது மட்டும் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என்று திமுகவினரிடம் நாம் கேட்ட போது: விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த திமுக தொண்டரின் மகள் திலகவதியை நாடகக் காதல் கும்பல் படுகொலை செய்தபோதும் திமுக போராடவில்லை. இப்போது உளுந்தூர்பேட்டையில் காதலிக்க மறுத்த திமுக தொண்டரின் மகள் சரஸ்வதியை நாடகக் காதல் கும்பல் படுகொலை செய்தபோதும் திமுக போராடவில்லை. வன்னியர் என்றால் தனது சொந்த கட்சி தொண்டர் வீட்டு துக்கத்திற்கு கூட இரங்கல் தெரிவிக்க மாட்டார் ஸ்டாலின். இது தான் நடைமுறை; உங்களுகெல்லாம் இது தெரியாதா? என்று எதிர் கேள்வி கேட்கின்றனர்.

இத்தனைக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நாடகக் காதல் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்காக தீவிரமாக வேலை செய்துள்ளார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வீரமணி. 2021 தேர்தலிலும் திமுக வேட்பாளருக்காக உழைத்துள்ளார் அவர். அப்படிப்பட்ட தீவிர திமுக தொண்டர் மகளையே படுகொலை செய்துள்ளது நாடகக் காதல் கும்பல். ஆனால், வன்னியர் என்கிற ஒரே காரணத்துக்காக நாடகக் காதல் படுகொலைகளை கண்டும் காணாமல் நழுவுகிறது திமுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *