கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீர் ஓய்வு அறிவிப்பு

விளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திடீரென அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக செயல்பட்டவர், 38 வயதாகும் யூசுப் பதான். கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள், மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, டி20 உலக கோப்பை 2007 மற்றும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக்கோப்பை 2011 ஆகிய இரு உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில், யூசுப் பதான் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் என, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இன்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவுக்காக விளையாடி கோப்பையை வென்றது, சச்சினை தோளில் சுமந்து வலம் வந்தது உள்ளிட்டமை மறக்க முடியாத தருணங்கள். சர்வதேச போட்டியில் தோனி தலைமையிலும், ஐ.பி.எல். போட்டியில் ஷேன் வார்ன் அணியிலும் அறிமுகமானேன்.

இப்போது, என்னுடைய வாழ்க்கையில் கிரிக்கெட்டில் முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்துவிட்டது. கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து நிலைகளில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணி, பயிற்சியாளர்கள் மற்றும் நாடு முழுமைக்கும் எனக்கு ஆதரவு மற்றும் அன்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *