யுவராஜின் மிகப்பெரிய சாதனை – 13வருடங்களுக்கு பிறகு முறியடித்த வீரர் யார் தெரியுமா ..?

விளையாட்டு

2007ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் செய்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர்.

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கிட்டத்தட்ட 16 நாடுகள் மோதின. அதில் இந்திய அணி இளம் படைகளுடன் சென்று கோப்பையை கைப்பற்றியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் அப்பொழுது இளம் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். வேகப்பந்து வீச்சாளரான ஸ்டுவர்ட் போர்டு பந்தில் இச்சாதனையை செய்தார் யுவராஜ்

கிட்டத்தட்ட 13ஆண்டுகள் இச்சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் தற்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணியும் மோதி வரும் 20 ஓவர் போட்டியில் இச்சாதனை சமன் செய்யப்பட்டது

Kieron Pollard six sixes in one over | After Sri Lanka's Akila Dananjaya  took hat-trick | West Indies vs Sri Lanka

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் கிரண் பொல்லார்டு 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து சமன் செய்துள்ளார். இவர் இலங்கை அணியின் ஸ்பின் பவுலர் அகில தனஞ்சய பந்தில் 6 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஓவரில் 36 ரன்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதன்மூலம் 2007ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட அப்போதைய சாதனை தற்போது 13 ஆண்டுகள் கழித்து சமன் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *